ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடிச் சலுகைகள் - விபரம்!
வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில், ஸ்கோடா ரேபிட் செடான் காருக்கு அதிரடிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்கோடா ரேபிட் காரை வாங்கும்போது பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது, கூடுதல் மதிப்பாக ரூ.30,000 போனஸ் பெறும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர, முதல் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இன்ஸ்யூரன்ஸ், 4 ஆண்டுகளுக்கான சாலை அவசர சேவை திட்டம் மற்றும் வாரண்டியையும் இலவசமாக வழங்குவதாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும். டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது.
ஸ்கோடா ரேபிட் பெட்ரோல் மாடல் ரூ.7.22 லட்சம் முதல் ரூ.9.82 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.8.39 லட்சம் முதல் ரூ.9.87 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








