ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி கடன் திட்டம் - விபரம்

கார் வாங்கிய முதல் ஓர் ஆண்டுக்கு மாதத் தவணையை இல்லாத புதிய கடன் திட்டத்தில், ஸ்கோடா ரேபிட் காருக்கு வழங்கப்படுகிறது.

முன்பணத்தை செலுத்தி காரை வாங்குவோர், அடுத்த ஆண்டு முதல் மாதத் தவணையை துவங்கும் விதத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் வாங்கி ஓர் ஆண்டுக்கு மாதத் தவணையை செலுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த கடன் திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் ஸ்கோடா ரேபிட் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

 கடன் திட்டம்

கடன் திட்டம்

உதாரணமாக ரேபிட் பெட்ரோல் காரின் ஆம்பிஷன் 1.6 எம்பிஐ மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டை வாங்குவோர், முன்பணமாக ரூ.1.55 லட்சம் செலுத்த வேண்டும். அதற்கு கடன் தொகையாக ரூ.6.20 லட்சம் பெற முடியும். 48 மாதத் தவணைகள் கொண்ட இந்த கடன் திட்டத்தில் முதல் 12 மாதங்களுக்கு மாதத் தவணை செலுத்த வேண்டியதில்லை.

மாதத் தவணை திட்டம்

மாதத் தவணை திட்டம்

இந்த கடன் திட்டத்தில் 13வது மாதத்திலிருந்து 24வது மாதம் வரையில் ரூ.15,000 மாதத் தவணையாக செலுத்த வேண்டும். 25வது மாதத்திலிருந்து 47வது மாதம் வரை ரூ.22,222 மாதத் தவணையாக செலுத்த வேண்டும். கடைசி 48வது மாதத்தில் ரூ.24,681ஐ மாதத் தவணையாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் அருகிலுள்ள ஸ்கோடா டீலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 104 பிஎச்பி திறன் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களிலும், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் கிடைக்கிறது.

 மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் லிட்டருக்கு 15.42 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14.3 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. டீசல் மாடல் லிட்டருக்கு 20.54 கிமீ மைலேஜை தரும் என தெரிவிக்கப்படுகிறது.

விலை

விலை

ஸ்கோடா ரேபிட் கார் ரூ.7.16 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

ரேபிட் காரின் சிறப்பம்சங்கள்

ரேபிட் காரின் சிறப்பம்சங்கள்

இந்த காரின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2014, 14:20 [IST]
English summary
Skoda India has announced a limited period EMI Holiday offer for those planning to buy the Rapid premium sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+