கூடுதல் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்

By Saravana

கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அல்டிமா என்ற பெயரில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஸ்பெஷல் எடிசன் ஆக்சஸெரீஸ்களுடன் இந்த காரை வாங்கிக் கொள்ளலாம். இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்களின் விபரங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாடி டீகெல்

பாடி டீகெல்

ஸ்பெஷல் எடிசன் மாடலாக காட்டும் விதத்தில் காரின் முன்புறத்திலிருந்து பின்புறம் வரை இரட்டை வரிக் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் முடிவில் அல்டிமா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

சாட் நவ் நேவிகேஷன்

சாட் நவ் நேவிகேஷன்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் கார்மின் அல்லது டாம் டாம் சாட் நவ் சிஸ்டத்துடன் பெற முடியும்.

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்

பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா, 7 ஸ்போக் அலாய் வீல்கள், லெதர் சீட் கவர்கள், அல்டிமா பேட்ஜ் பொறிக்கப்பட்ட தரை விரிப்புகள், டோர் சில் கார்டுகள் ஆகிய ஆக்சஸெரீஸ்களும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் இடம்பெற்றிருக்கின்றன.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா

கொஞ்சம் எக்ஸ்ட்ரா

ஆம்பிஷன் ப்ளஸ் வேரியண்ட்டில் கூடுதலாக புரொஜெக்டர் தோற்றத்திலான ஹெட்லைட்டுகள், கூடுதல் ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

 எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 105 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க்கையும் அளிக்கும் எஞ்சினும், டீசல் மாடலில் 105 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

1.6 லிட்டர் பெட்ரோல்

ஆம்பிஷன் ப்ளஸ் மேனுவல்: ரூ.8.33 லட்சம்

ஆம்பிஷன் ப்ளஸ் ஆட்டோ: ரூ.9.31 லட்சம்

எலிகன்ஸ் மேனுவல்: ரூ.8.95 லட்சம்

எலிகன்ஸ் ஆட்டோ: ரூ.9.92 லட்சம்

1.6 லிட்டர் டீசல்

ஆம்பிஷன் ப்ளஸ்: ரூ.9.40 லட்சம்

எலிகன்ஸ்: ரூ.9.97 லட்சம்

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2014, 14:52 [IST]
English summary
Skoda has announced a special edition version of the Rapid sedan dubbed Ultima. Skoda Rapid Ultima is available for the Ambition Plus and Elegance variants, with a starting price of INR 8.33 lakhs (Ex-showroom, Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+