கார் ஓட்டும்போது புகைப் பிடித்தால் லைசென்ஸ் ரத்து: குஜராத் ஆர்டிஓ.,அதிரடி
கார் ஓட்டும்போது புகைப்பிடித்தால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வகை செய்யும் புதிய விதிமுறையை குஜராத் போக்குவரத்து துறை அமல்படுத்தியுள்ளது.
கார் ஓட்டும்போது டிரைவர்களின் சில தவறான பழக்க வழக்கங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட காரணமாகியுள்ளது. அது பிற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தொந்தரவாக அமைகிறது.

இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கான புதிய விதிமீறல்கள் குறித்த பட்டியலை குஜராத் போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது. அதில், அதிவேகம், கார் ஓட்டும்போது மொபைல்போனில் பேசுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், கார் ஓட்டும்போது புகைப்பிடித்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள விதிமீறல்களுக்கு ஓட்டுனரின் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விதிமுறையை மீறும் வாகன ஓட்டிக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அதன்பிறகு அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்," என்று அம்மாநில போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








