மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு புல்லட் புரூஃப் கிட்: ஸ்நாப்டீல் தளத்தில் விற்பனை!
மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு புல்லட் புரூஃப் பாகங்களை பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஸ்நாப்டீல்.காம் விற்பனை செய்கிறது. இதற்காக, ஸ்நாப்டீல் தளத்துக்கும், மஹிந்திராவுக்கும் இடையில் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கான குண்டு துளைக்காத பாகங்களை டிஃபென்ஸ் லேண்ட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு இந்த புல்லட் புரூஃப் கிட்டை எளிதாக வாங்கி பொருத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புல்லட் ப்ரூஃப் கிட்டில் இடம்பெற்றிருக்கும் பாகங்கள், விலை விபரம் போன்ற கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புல்லட் புரூஃப் கிட்
இந்த கிட்டில் புல்லட் புரூஃப் பாடி பேனல்கள், குண்டு வெடிப்பிலும் சேதமடையாத டீசல் டேங்க்கிற்கான விசேஷ கவசம், புல்லட் புரூஃப் கண்ணாடிகள், வாகனத்தை கண்காணிக்கும் கருவி போன்றவை இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு
9 மிமீ பிஸ்டல் மூலம் தாக்குதல் நடத்தினாலும் இந்த புல்லட் புரூஃப் பாகங்கள் கவசமாக நின்று பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும்.

விலை
இந்த புல்லட் புரூஃப் கிட் ரூ.12,66,738 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.75,000 செலுத்தி ஸ்நாப்டீல் தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளளாம். மீதமுள்ள தொகையை நேரடியாக விற்பனையாளரிடம் செலுத்த வேண்டும்.

வரிகள் உள்பட
புல்லட் புரூஃப் பாகங்களை டெலிவிரி கொடுப்பதற்கான கட்டணம், பொருத்துவதற்கான கட்டணம், வரிகள் ஆகிய அனைத்தம் இந்த தொகையில் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள்
இந்த குண்டு துளைக்காத பாகங்களுக்கு ஓர் ஆண்டு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

கூடுதல் விபரங்கள்
கூடுதல் விபரங்களை ஸ்நாப்டீல் தளத்தில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








