ரெக்ஸ்டன் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தும் சாங்யாங்!
ரெக்ஸ்டன் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்டை சாங்யாங் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.
ரெக்ஸ்டன் ஆர்எக்ஸ்6 என்ற பெயரில் அந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

நடுத்தர வேரியண்ட்
தற்போது விற்பனையில் இருக்கும் ஆர்எக்ஸ் 5 மற்றும் ஆர்எக்ஸ் 7 என்ற இரு வேரியண்ட்டுகளுக்கும் இடையில் புதிய ஆர்எக்ஸ் 8 நிலை நிறுத்தப்படும். அதாவது, மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலின் டாப் வேரியண்ட்டாக இருக்கும்.

எஞ்சின்
தற்போது ரெக்ஸ்டன் எஸ்யூயிவில் இருக்கும் அதே 5 சிலிண்டர் 2.7 லிட்டர் மெர்சிடிஸ் பென்ஸ் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது.

வசதிகள்
ஆர்எக்ஸ்7 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த வேரியண்ட்டில் இருக்கும். மெமரி ஃபங்ஷன் கொண்ட இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ரெயின் சென்சிங் வைப்பர்கள், பிரிமியம் லெதர் அப்ஹோல்ஸ்டரி, ஸ்டீயரிங் வீல், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் போன்றவை இருக்கும்.

விற்பனை
இதுவரை 3,600 ரெக்ஸ்டன் எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. புதிய ஆர்எக்ஸ்6 வேரியண்ட் மூலம் விற்பனை அதிகரிக்கும் என்று மஹிந்திரா நம்புகிறது.


Click it and Unblock the Notifications








