பவர்ஃபுல் புதிய சுஸுகி ஆல்ட்டோ ஆர்எஸ் காரின் படம் வெளியீடு!
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டோக்கியோ ஆட்டோமொபைல் கண்காட்சியில், அறிமுகம் செய்யப்பட இருக்கும் சுஸுகி ஆல்ட்டோ ஆர்எஸ் மாடலின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜப்பானிய மார்க்கெட்டுக்கான புதிய சுஸுகி ஆல்ட்டோ காரின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், இந்த காரின் பவர்ஃபுல் மாடலாக வர இருக்கும் ஆல்ட்டோ ஆர்எஸ் காரின் படங்களையும் சுஸுகி வெளியிட்டிருக்கிறது.

பழமையான டிசைன் தாத்பரியத்தை உணர்த்தும் முகப்பு கிரில், புரொஜெக்டர் விளக்குகள் கொண்ட நாற்கர வடிவ ஹெட்லைட் யூனிட், சிவப்பு வண்ண அலாய் வீல்கள், ஆர்எஸ் டீகெல் ஆகியவை குறிப்பிட்டு கூறத்தக்கவை. இன்டிரியரும் டியூவல் வண்ணக் கலவை கொடுக்கப்பட்டு அசத்தலாக இருக்கிறது. வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகள், ஆர்எஸ் பேட்ஜ் கொண்ட இருக்கைகள், புதிய அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல்ட்டோ ஆர்எஸ் காருக்கு வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த காரில் 51பிஎச்பி பவரையும், 63 என்எம் டார்க்கையும் வழங்கும் 660சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த கார் 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. அடுத்த மாதம் 9ந் தேதி இந்த காரின் முழுமையான விபரங்கள் வெளியிடப்பட உள்ளன. இது ஜப்பானிய மார்க்கெட்டுக்கான மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








