பல வண்ணக் கலவையில் சுண்டி இழுத்த கிராண்ட் விட்டாரா எஸ்யூவி!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி விட்டாரா எஸ்யூவியின் கவர்ச்சி அம்சங்கள் மிகுந்த லிமிடேட் எடிசன் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களிடம் பெறும் வரவேற்பை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த எஸ்யூவியை பார்வைக்கு வைத்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்புற தோற்றம்
புதிய முன்பக்க கிரில், கிரில்லுக்கு நான்கு பக்கமும் சுற்றி வரும் குரோம் பட்டை, பனி விளக்குகள் என அனைத்தும் விட்டாரா தோற்றத்தை கம்பீரமாக மாற்றியுள்ளது.

பெரிய சைஸ்!
புதிய டெயில் லைட்டுகள், பம்பர் ஆகியவை கிராண்ட் விட்டாரா பெயரை பரைசாற்றும் வகையில், பெரிதாக மாற்றிக் காட்டுகின்றன.

பெரிய வீல் ஆர்ச்
பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது பெரிய வீல் ஆர்ச்சுகள், கதவுகளுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குரோம் பட்டை, குரோமிய கதவு கைப்பிடி ஆகியவை காருக்கு பிரிமியம் அந்தஸ்தை வழங்குகிறது. தவிர, காரின் கண்ணாடி கதவுகளுக்கு இடையிலான பில்லர்கள் மற்றும் கூரை கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்
மஞ்சள், கருப்பு வண்ணத்தில் என இரட்டை வண்ணத்தில் இன்டிரியர் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலில் லெதர் கவர் மற்றும் டேஷ்போர்டிலும் லெதர் பினிஷிங் செய்யப்பட்டிருக்கிறது.

அம்சங்கள்
டச் ஸ்கிரீன் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்ட்ம், லெதர் இருக்கைகள், பின்புற பயணிகளுக்கு டிவி திரை ஆகியவையும் உள்ளன. ஆனால், இந்த மஞ்சள் வண்ணம்தான் கண்களை கூச செய்கிறது.


Click it and Unblock the Notifications








