பாரீஸ் மோட்டார் ஷோவில் புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவி அறிமுகம்
ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக புதிய எஸ்யூவி மாடலை பாரீஸ் மோட்டார் ஷோவில் சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
விட்டாரா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் ஐவி-4 கான்செப்ட் மாடலில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சந்தையிலிருந்து விடைபெற இருக்கும் கிராண்ட் விட்டாரா பெயரில் விட்டாரா என்ற பெயரை மட்டும் எடுத்து இந்த புதிய எஸ்யூவி மாடலை வெளியிட்டிருக்கிறது சுஸுகி.

தோற்றம்
பகல்நேர எல்இடி விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரியர் வீல் ஆர்ச், பானட் டிசைன் போன்றவை பழைய விட்டாரா டிசைனை நினைவுப்படுத்தும் சில அம்சங்களும் இருக்கின்றன. மொத்தத்தில் கம்பீரமான தோற்றத்தை கொண்டிருக்கிறது.

எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 118 எச்பி பவரையும், 156 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 118 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.

4 வீல் டிரைவ்
இந்த புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை ஆப்ஷனலாக வழங்க சுஸுகி முடிவு செய்திருக்கிறது.

சிறப்பம்சங்கள்
7 உயிர் காக்கும் காற்றுப் பைகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரேடார் பிரேக் சப்போர்ட், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களாக இருக்கும்.

உற்பத்தி
ஹங்கேரி நாட்டில் உள்ள சுஸுகி ஆலையில் இந்த புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளது. முதலில் ஐரோப்பிய மார்க்கெட்டிலும், பின்னர் சுஸுகி நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








