ஒரு லட்ச ரூபாய் விலை குறைப்பு... ஏரியாவில் திடீர் சலசலப்பை ஏற்படுத்திய ஆரியா!
டாடா ஆரியா எம்பிவி காரின் விலை ஒரு லட்ச ரூபாய் வரை அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.
டாடா ஆரியா எம்பிவி காரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. விலை குறைந்த மாடலை அறிமுகம் செய்தும், பலனில்லை. இந்த நிலையில், ஆரியாவின் விலை மீண்டும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

விலை குறைப்பு
ரூ.9.95 லட்சம் ஆரம்ப விலையில் டாடா ஆரியா கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது ரூ.8.95 லட்சம் என்ற ஆரம்ப விலையில் ஆரியாவுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய் ஒரே தடவையில் ஆரியா விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

தாரள இடவசதி
மிகச்சிறந்த வசதிகள், தாராள இடவசதி கொண்ட மாடலாக இதனை டாடா மோட்டார்ஸ் முன்னிலைப்படுத்தி வருகிறது. இந்த விலை குறைப்பு மூலம் நிச்சயம் ஆரியா விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும் என டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எஞ்சின்
டாடா ஆரியா எம்பிவி காரில் 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கு்ம் 2.2 லிட்டர் வேரிகோர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்
இந்த கார் லிட்டருக்கு 15.05 கிமீ மைலேஜ் தரும் என்றும், இதன் செக்மென்ட்டிலேயே மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட காராகவும் டாடா குறிப்பிடுகிறது. டாப் வேரியண்ட் மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது.

முழு விபரம்
ஆரியா காரின் சிறப்பம்சங்கள், வசதிகள் உள்ளிட்ட முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








