டாடா போல்ட் டீசல் மாடல் ஏஎம்டி கியர் பாக்ஸுடன் வருகிறதாம்... செலிரியோவுக்கு கொஞ்சம் கஷ்டம்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் போல்ட் என்ற புதிய ஹேட்ச்பேக் காரையும், ஸெஸ்ட் என்ற காம்பெக்ட் செடான் காரையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இதில், ஸெஸ்ட் காம்பெக்ட் செடான் காரின் டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய வகை கியர் பாக்ஸை அறிமுகம் செய்வதாக அறிவித்தது.

ஆனால், போல்ட் காரில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்தது. இந்த நிலையில், மாருதி செலிரியோவின் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கருத்தில்கொண்டு தற்போது போல்ட் காரின் டீசல் மாடலில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளதாக பிரபல தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.


டீசல் மாடலில் ஏஎம்டி கியர் பாக்ஸ்

டீசல் மாடலில் ஏஎம்டி கியர் பாக்ஸ்

பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலில் மட்டுமே தற்போது ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் மாருதி செலிரியோ விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், டாடா போல்ட் டீசல் மாடலில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டால் அதிக வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

அதிகபட்சமாக 74 பிஎச்பி ஆற்றலையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் குவாட்ராஜெட் டீசல் எஞ்சினுடன் டாடா போல்ட் ஹேட்ச்பேக் கார் வர இருக்கிறது. ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தவிர்த்து 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் வரும் என்று தெரிகிறது. ஆனால், போல்ட் காரின் பெட்ரோல் மாடலில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.

புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய பெட்ரோல் எஞ்சின்

டீசல் மாடலில் இடம்பெறும் எஞ்சின் விஸ்டா காரில் இருந்த அதே 1.3 லிட்டர் எஞ்சின்தான். ஆனால், பெட்ரோல் மாடலில் புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 84 பிஎச்பி ஆற்றலையும், 140 என்எம் டார்க்கையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

டாடா போல்ட் மற்றும் ஸெஸ்ட் கார்கள் வரும் ஆகஸ்ட்டில் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், இரு கார்களின் அறிமுகத்துக்காக டீலர்ஷிப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளையும், ஏற்கனவே உள்ள டீலர்களை மேம்படுத்தும் பணிகளையும் டாடா மோட்டார்ஸ் செய்து வருகிறது.

வரவேற்பு

வரவேற்பு

ஒருவேளை, போல்ட் மற்றும் ஸெஸ்ட் கார்களின் டீசல் மாடல்கள் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் வரும்போது பெரிய வரவேற்பு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. விலை நிர்ணயத்தில் சொதப்பாமல் இருந்தால் தற்போது இந்த மார்க்கெட்டுகளில் முன்னணியில் இருக்கும் மாடல்களுக்கு இந்த இரு மாடல்களும் கடும் போட்டியை தரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 30, 2014, 9:46 [IST]
English summary
A fresh report suggests that Tata Motors will launch its Bolt hatchback with automated manual transmission.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+