ஏராள கூடுதல் வசதிகளுடன் வரும் டாடா நானோ ப்ளஸ்
நானோ காரின் விற்பனையை அதிகரிப்பதற்காக அவ்வப்போது வசதிகளை அதிகரித்து புதிய வேரியண்ட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.
பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ கார் விரைவில் நானோ ட்விஸ்ட் என்ற பெயரில் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, நானோ ப்ளஸ் என்ற புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

புதிய அம்சங்கள்
முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள், மேம்படுத்தப்பட்ட ஏசி, பக்கெட் இருக்கைகள், புதிய டேஷ்போர்டு ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.

எல்இடி ஹெட்லைட்
நானோ ப்ளஸ் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பனி விளக்குகளும் இடம்பெற்றிருக்கும்.

டிசைன் மாற்றம்
முன்புற வடிவமைப்பில் சிறிது மாறுதல்களுடனும், பின்புறத்தில் திறந்து மூடும் வகையிலான கதவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

வேரியண்ட்டுகள்
தற்போது டாடா நானோ கார் ஸ்டான்டர்டு, சிஎக்ஸ், எல்எக்ஸ், சிஎன்ஜி சிஎக்ஸ் மற்றும் சிஎன்ஜி எல்எக்ஸ் ஆகிய பெட்ரோல் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த வரிசையில், நானோ ட்விஸ்ட் மற்றும் நானோ ப்ளஸ் ஆகியவை இணைய உள்ளன.

வெற்றி கிட்டுமா?
எத்துனை வசதிகளை அள்ளிக் கொடுத்தாலும் நானோவின் விற்பனை அதிகரிக்குமா என்பதில் சந்தேகமே எழுகிறது. விலை சற்று கூடுதலானாலும், டிசைனிலும், எஞ்சினிலும் பெரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் விருப்பமும், எதிர்பார்ப்புமாக உள்ளது. இதனை டாடா மோட்டார்ஸ் இனியாவது உணர்ந்து அதற்கு தக்கவாறு செயல்படுமா என்பதே ஒரு லட்ச ரூபாய் கோஷத்துடன் வந்த நானோ மீதான மில்லியன் டாலர் கேள்வி.


Click it and Unblock the Notifications








