ஜனவரி 20ல் விற்பனைக்கு வருகிறது புதிய டாடா போல்ட்!
அடுத்த மாதம் 20ந் தேதி புதிய டாடா போல்ட் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரை தொடர்ந்து, டாடா மோட்டார்ஸின் புதிய டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் மாடல்தான் போல்ட்.

சிறப்பான டிசைன், புதிய பெட்ரோல் எஞ்சின், ஏராளமான சிறப்பு வசதிகளுடன் வரும் டாடா போல்ட் காருக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுவிடாதபடி, போல்ட் காரின் விற்பனையை டாடா மோட்டார்ஸ் தள்ளி போட்டு வந்தது.
இந்த நிலையில், அடுத்த மாதம் 20ந் தேதி டாடா போல்ட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தற்போது போல்ட் காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் ஆன்லைனில் முன்பதிவு நடந்து வருகிறது நினைவுகூறத்தக்கது.
டாடா போல்ட் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!


Click it and Unblock the Notifications








