டாடா நெக்ஸன் காம்பெக்ட் எஸ்யூவி விற்பனை எப்போது?
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் டாடா நெக்ஸன் காம்பெக்ட் எஸ்யூவி உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் உயரதிகாரி ரஞ்சித் யாதவ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தயாரிப்பு நிலை
இன்னும் 24 மாதத்தில் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு துவக்கத்தில் தயாரிப்பு நிலை மாடல் வெளியிடப்படும் என்று ரஞ்சித் யாதவ் தெரிவித்துள்ளார்.

4 மீட்டர் எஸ்யூவி
1998ம் ஆண்டுக்கு முதல் கார் அறிமுகப்படுத்துக்கு பின்னர் டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ள கார்களுக்கான புதிய எக்ஸ்1 பிளாட்ஃபார்மில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த காம்பெக்ட் எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 108 பிஎச்பி ஆற்றலையும், 170 என்எம் டார்க்கையும் அளிக்கும் வகையில் ட்யூன் செய்யப்படடிருக்கும். 5 ஸ்பீடு செமி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டீசல் எஞ்சின்
டீசல் மாடலில் ஃபியட்டிடமிருந்து பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 90 பிஎச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும்.

போட்டி
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும் விலையில் வரலாம். அதேவேளை, இன்னும் இரண்டு ஆண்டுகளில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு இதே அளவில் இருக்குமா என்பதையும் சற்று யோசித்து பார்க்க வேண்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








