டாடா கார்களுக்கு ரூ.1.10 லட்சம் வரை தள்ளுபடி: நானோ காரையும் வெல்லும் வாய்ப்பு
அனைத்து டாடா கார்களுக்கும் ரூ.90,000 வரை சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 30ந் தேதி வரை இந்த சிறப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
3 ஆண்டுகளுக்கான இன்ஸ்யூரன்ஸ், சேமிப்பு சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளை டாடா கார்களுக்கு பெற முடியும். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

நானோ கார் பரிசு திட்டம்
டாடா கார்களை டெஸ்ட் டிரைவ் செய்பவர்களுக்கு சிறப்பு பரிசாக நானோ காரை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. குலுக்கல் முறையில் வாரம் ஒருவருக்கு நானோ ட்விஸ்ட் காரை பரிசாக வழங்கப்படும் என்று டாடா தெரிவிக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாடா கார்களுக்கான சிறப்புச் சலுகைகளின் விபரங்களை காணலாம்.

நானோ காருக்கான சலுகைகள்
டாடா நானோ காருக்கு அதிகபட்சமாக ரூ.55,000 வரை தள்ளுபடி சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. நானோ காருக்கு 4 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ தூரத்துக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

டாடா இண்டிகா இவி2
டாடா இண்டிகா இவி2 காருக்கு ரூ.56,000 வரையில் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் சிஆர்4 எஞ்சின், தாராள இடவசதி கொண்டதாக இண்டிகா இவி2 கார் கிடைக்கிறது.

டாடா விஸ்டா டெக்
டாடா விஸ்டா டெக் காருக்கு ரூ.72,000 வரையில் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டச் ஸ்கிரீன், 75 பிஎஸ் பவர் கொண்ட குவாட்ராஜெட் டீசல் எஞ்சின் உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் கிடைக்கிறது.

இண்டிகோ இசிஎஸ்
இண்டிகோ இசிஎஸ் காம்பெக்ட் செடான் காருக்கு ரூ.58,000 வரையில் அதிகபட்சமாக சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மியூசிக் சிஸ்டம், புதிய சஸ்பென்ஷன் அமைப்புடன் கிடைக்கிறது.

டாடா மான்ஸா
டாடா மான்ஸா காருக்கு ரூ.65,000 வரை சேமிக்க முடியும். 90 பிஎஸ் பவரை அளிக்கும் க்யூ-ஜெட் டீசல் எஞ்சின், டச் ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.

டாடா சுமோ கோல்டு
டாடா சுமோ கோல்டு எஸ்யூவிக்கு ரூ.72,000 வரையில் சேமிக்க முடியும். அதிசக்திவாய்ந்த சிஆர்4 3.0 லிட்டர் எஞ்சின், ரூஃப் மவுண்ட் டியூவல் ஏசி, டியூவல் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது.

சஃபாரி ஸ்ட்ராம்
சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.1.09 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள் கிடைக்கின்றன. அதிசக்திவாய்ந்த 2.2 லிட்டர் வேரிகோர் எஞ்சின், எலக்ட்ரானிக் ஷிஃப்ட் ஆன் ஃப்ளை 4 வீல் டிரைவ் சிஸ்டம், 3 ஆண்டுகளுக்கு அல்லது ஒரு லட்சம் கிமீ.,க்கான எஞ்சின் வாரண்டியுடன் கிடைக்கிறது.

டாடா ஆரியா
ஆரியா எம்பிவி காருக்கு ரூ.95,000 வரையிலான சலுகைகளை பெற முடியும். 150 பிஎஸ் பவரை அளிக்கும் 2.2 லிட்டர் வேரிகோர் எஞ்சின், லிட்டருக்கு 15.05 கிமீ மைலேஜ், 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ.,க்கான எஞ்சின் வாரண்டி ஆகிய சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது.

கூடுதல் விபரங்களுக்கு...
இந்த சலுகைகளை இந்த மாதம் 30ந் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள டாடா டீலர்களை அணுகவும்.


Click it and Unblock the Notifications








