மாருதியிலிருந்து விலகிய மாயங்க் பரீக் டாடா மோட்டார்ஸ் தலைவரானார்!
மாருதி நிறுவனத்திலிருந்து விலகிய மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி மாயங்க் பரீக் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைமை அதிகாரியாக மாயங்க் பரீக் பணிபுரிந்து வந்தார். இவரது திறமையான அணுகுமுறை மற்றும் மார்க்கெட்டிங் யுக்திகளால் மாருதி நிறுவனம் விற்பனையில் பல புதிய உச்சங்களை தொட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் மாருதி நிறுவனத்திலிருந்து மாயங்க் பரீக் விலகினார். இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக மாயங்க் பரீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை அவர் டாடா மோட்டார்ஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். விற்பனையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாயங்க் பரீக் தலைமையில் புதிய தெம்புடன் மார்க்கெட்டில் வளர்ச்சியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








