கார் ஷோரூம்களில் புதிதாக 3,000 பேரை பணியமர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
நாடு முழுவதும் உள்ள கார் ஷோரூம்களில் பணியாற்றுவதற்காக புதிதாக 3,000 பேரை வேலைக்கு எடுக்க இருக்கிறது டாடா மோட்டாரா்ஸ்.
டாடா போல்ட் மற்றும் ஸெஸ்ட் கார்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த புதிய கார்களின் விற்பனையை கவனிப்பதற்காக புதிய பணியாளர்களை டீலர்களில் நியமிக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

இதற்காக நாடு முழுவதும் உள்ள டீலர்களுடன் இணைந்து புதிதாக 3,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. விற்பனை மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரிகள் மற்றும் குழு தலைவர்கள் போன்ற பணிகளுக்காக இந்த வேலைவாய்ப்பு முகாமை டாடா மோட்டார்ஸ் நடத்த உள்ளது.
தகுதி தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள 200 டாடா மோட்டார்ஸ் கார் ஷோரூம்களில் பணியமர்த்தப்படுவர். இதுதவிர, தனது கார் ஷோரூம்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்தவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








