அனைத்து கார்களிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல்கள்: டாடா அதிரடி
அனைத்து கார்களிலும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனை(AMT) பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
முதலில் போல்ட், ஸெஸ்ட் மற்றும் நானோ கார்களில் இந்த புதிய வகை டிரான்ஸ்மிஷன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, தனது அனைத்து கார்களிலும் இதே டிரான்மிஷனை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா திட்டமிட்டுள்ளது.

இந்த டிரான்ஸ்மிஷனை முழு ஆட்டோமேட்டிக் கார் போன்றோ அல்லது செமி ஆட்டோமேட்டிக் காராகவோ பயன்படுத்திக் கொள்ளும் வசதி உள்ளது.
சாதாரண ஆட்டோமேட்டிக் கார்களை விடவும் இது 10 முதல் 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லது.
ஃபார்முலா- 1 கார்களுக்கு கியர் பாக்ஸ் சப்ளை செய்யும் இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரெல்லி இந்த புதிய வகை டிரான்ஸ்மிஷனை டாடாவுக்கு சப்ளை செய்கிறது.


Click it and Unblock the Notifications








