இருக்கை அமைப்பில் முக்கிய மாற்றத்துடன் வரும் டாடா சஃபாரி ஸ்ட்ராம்

By Saravana

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விற்பனையில் எதிர்பார்த்த விற்பனை இலக்குகளை எட்டவில்லை.

இந்தநிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


சிறிய மாற்றங்கள்

சிறிய மாற்றங்கள்

முன்புற கிரில், பம்பர் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதோடு, உட்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். ஹார்மன் மியூசிக் சிஸ்டம், 10 ஸ்பீக்கர்கள், இன் பில்ட் டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம் போன்றவை சிறப்பாக இருக்கும்.

 கூடுதல் பவர்

கூடுதல் பவர்

சிறிதளவு எஞ்சின் பவர் கூட்டப்பட உள்ளது. 148 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் கூடுதல் சக்திகொண்டதாக 2.2 லிட்டர் வேரிகோர் டர்போ டீசல் எஞ்சின் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட எஞ்சின் ஏற்கனவே ஆரியா காரில் பொருத்தப்பட்டிருக்கிறது.

3வது வரிசை இருக்கை

3வது வரிசை இருக்கை

பக்கவாட்டில் இருக்கும் மூன்றாவது வரிசை இருக்கைகளை எடுத்துவிட்டு, காரின் முன்பக்கத்தை பார்த்து பயணிகள் அமரும் வகையில் இருக்கை அமைப்பு மாற்றப்பட உள்ளதாம்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ், டியூவல் ஏர்பேக்குகள், எலக்ட்ரிக்கல் ரியர் வியூ கண்ணாடிகள் போன்ற பல நிரந்தர வசதிகளுடன் வருகிறது. மொத்தத்தில் எந்தவிதத்திலும் ஒரு குறைவில்லா எஸ்யூவி மாடலாக களமிறக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

விலை

விலை

டாடா சஃபாரி எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் விலையிலும் சிறிது கூடுதலாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது ரூ.9.93 லட்சம் முதல் ரூ.13.70 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 8, 2014, 12:15 [IST]
English summary
Tata Motors to launch Safari Storme minor facelift model in domestic market soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+