ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் டிரக், பஸ்களை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்!
மாருதி செலிரியோ காரில் அறிமுகம் செய்யப்பட்ட ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் என்ற தானியங்கி டிரான்ஸ்மிஷன் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரின் டீசல் மாடலில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடலை அறிமுகம் செய்தது.
இது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. போல்ட் ஹேட்ச்பேக் கார் மற்றும் நானோ காரிலும் இந்த தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்கள் வர இருக்கின்றன. இந்த நிலையில், தனது நடுத்தர வகை பஸ் மற்றும் டிரக் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பஸ் மற்றும் டிரக்குகளின் சோதனை ஓட்டங்களை டாடா மோட்டார்ஸ் துவக்கியுள்ளது.

டாடா ஏஎம்டி பஸ்
கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட மார்க்கோபோலோ ஹைபிரிட் பஸ்சை காட்சிக்கு வைத்திருந்தது. டாடா பஸ்சில் இருந்த ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வாப்கோ நிறுவனம் தயாரித்து கொடுத்திருந்தது.

சோதனை ஓட்டம்
ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட டிரக் மற்றும் பஸ் மாடல்களின் சோதனை ஓட்டங்களை தற்போது டாடா மோட்டார்ஸ் நடத்தி வருகிறது.

அறிமுகம்
அடுத்த ஆண்டு இந்த ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட பஸ் மற்றும் டிரக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா திட்டமிட்டுள்ளது.

அதிக பயன்
அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான விலை போன்றவை ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனின் சிறப்பம்சங்களாக தெரிவிக்கின்றனர்.

ஏஸ் மினி டிரக்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றியை பெற்ற வர்த்தக வாகனமான ஏஸ் மினி டிரக்கிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யவும் டாடாவிடம் திட்டம் உள்ளது.

ஏஎம்டி மாடல்கள்
வால்வோ, ஸ்கானியா பஸ்களில் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட பஸ்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ஸ்கானியா டெலிவிரி கொடுத்த மெட்ரோலிங்க் சொகுசு பஸ்சில் ஏஎம்டி கியர்பாக்ஸ்தான் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோல்கட்டாவில் அசோக் லேலண்ட் நிறுவனம் ஜன்பஸ் என்ற பெயரில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட புதிய பஸ் மாடலை அறிமுகம் செய்தது.


Click it and Unblock the Notifications








