விற்பனையில் தொடர் சரிவு: பணியாளர்களை விஆர்எஸ்-ல் அனுப்பும் டாடா மோட்டார்ஸ்!
விற்பனையில் ஏற்பட்டு வரும் தொடர் சரிவால், பணியாளர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் வீட்டுக்கு அனுப்ப டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
முதல்முறையாக இந்தியாவில் டிரக்குகளுக்கான பந்தயத்தை டாடா மோட்டார்ஸ் நடத்துகிறது. வரும் மார்ச் மாதம் இந்த டிரக் பந்தயம் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில் பேசிய டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் கூறுகையில்," வாகன சந்தை தொடர்ந்து சரிவுப் பாதையிலே சென்று கொண்டிருக்கிறது.
எங்களது சந்தையை வலுப்படுத்திக் கொள்ள எங்களது உள்கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை விரைவில் வழங்க இருக்கிறோம். இது மிகக் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும்," என்றார்.
இந்த நிலையில், புதிய தயாரிப்புகள் மற்றும் எதிர்கால வர்த்தக் விரிவாக்கத்திற்காக ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








