ஜேஎல்ஆர் இருக்க பயமேன்... ஃபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்கும் டாடா!
ஜாகுவார் லேண்ட்ரோவர்- டாடா மோட்டார்ஸ் கூட்டணியில் புத்தம் புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரபல வர்த்தக இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹூண்டாய் சான்டா ஃபீ மற்றும் ஃபோர்டு எண்டெவர் போன்ற பிரிமியம் எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். வரும் 2016- 17ம் ஆண்டுவாக்கில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்
இந்த புதிய எஸ்யூவி மாடல் க்யூ5 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

டிசைன் டீம்
கார்ல் ஹெயின்ஸ் செர்வோஸ் தலைமையிலான 45 எஞ்சினியர்கள் கொண்ட டிசைன் டீம் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி மாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிளாட்ஃபார்ம்
லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்-2 எஸ்யூவியை அடிப்படையாக் கொண்டு இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்படுகிறது.

இருக்கை வசதி
இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை
ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கும் இடையிலான விலையில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
(குறிப்பு: மாதிரிக்காக டாடா சஃபாரி ஸ்ட்ராம் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)


Click it and Unblock the Notifications








