காவல்துறைக்கு 1,500 சுமோ கார்களை சப்ளை செய்யும் டாடா மோட்டார்ஸ்!

By Saravana

காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினரின் பயன்பாட்டுக்காக 1,562 சுமோ கோல்டு கார்களை சப்ளை செய்ய ஆர்டர் பெற்றிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

என்ட்ரி லெவல் எஸ்யூவி வகையை சேர்ந்த சுமோ கோல்டு காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினரால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோந்து மற்றும் அலுவலகப் பணிகளுக்கு சிறந்த இருக்கை அமைப்பு மற்றும் பராமரிப்பு கொண்ட மாடலாக இருப்பதால் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது.

Tata Sumo Gold

இந்த நிலையில், புதிதாக சுமோ கோல்டு எஸ்யூவி மாடல்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றிருக்கிறது. விலையும் போட்டியாளர்களைவிட மிக குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் 85 பிஎஸ் பவரை அளிக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 182 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டிருப்பதால் இந்தியாவின் எந்தவொரு சாலைநிலைக்கும் ஏற்ற மாடலாக விளங்குகிறது.

Most Read Articles
English summary

 Tata Motors has announced that it has received an order for 1542 units of the Sumo Gold utility vehicles from various Police and law enforcement agencies across the country.
Story first published: Saturday, December 6, 2014, 16:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X