ஆட்டோ எக்ஸ்போவை கலக்கும் டாடாவின் 'கஸ்டம்' மாடல்கள்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டாடாவின் கஸ்டமைஸ் எஸ்யூவி மற்றும் மினி வேன் மாடல்கள் பார்ப்போரை கவர்ந்திழுத்து வருகிறது.

டாடா சஃபாரி, சுமோ மற்றும் வென்ச்சர் போன்ற வாகனங்களின் அட்டாகாசமான கஸ்டம் மாடல்களை பார்வைக்கு வைத்து அசத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். அதன் படங்களையும், விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

லடாக் எடிசன் என்ற பெயரில் சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் கஸ்டம் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடா காட்சிக்கு வைத்துள்ளது. லடாக் ஸ்பெஷல் எடிசன் டீகெல், கிளாடிங்குகள், புல் கார்டு, மல்டி டெர்ரெய்ன் டயர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் 2.2 லிட்டர் டைகோர் எஞ்சினண் பொருத்தப்பட்டுள்ளது. 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் பவரையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

டாடா சுமோ எக்ஸ்ட்ரீம்

டாடா சுமோ எக்ஸ்ட்ரீம்

டாடா சுமோ எஸ்யூவியின் கஸ்டம் மாடலும் பார்ப்போரை வசீகரித்து வருகிறது. நிமிடத்துக்கு ஒருமுறை சாலைகளில் பார்க்கும் சுமோவை சட்டென்று அடையாளம் சொல்ல முடியாத அளவுக்கு மாற்றியிருக்கிறது டாடா. எக்ஸ்ட்ரீம் என்ற பெயரிலான இந்த கஸ்டமைஸ் மாடலில் டியூவல் கலர் இன்டிரியர், அலாய் வீல்கள், மல்டி டெர்ரெய்ன் டயர்கள் பொருத்தப்பப்பட்டுள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 84 பிஎச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் சிஆர்4 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

 டாடா ஆட் வென்ச்சர்

டாடா ஆட் வென்ச்சர்

பிரத்யேக வண்ணம், மேட் பினிஷ் செய்யப்பட்ட டாடா ஆட் வென்ச்சர் மினி வேன் கான்செப்ட்டும் வசீகரித்து வருகிறது. இந்த மினி வேனின் உள்ளே மடக்கி விரிக்கும் வசதியுடைய டேபிள், காபி மெஷின், டியூவல் ஏசி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மினி வேனில் 70 பிஎச்பி ஆற்றலையும், 140 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2014, 12:36 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+