புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் கலக்க வரும் புதிய டாடா கார்கள்
விஸ்டா அடிப்படையிலான ஃபால்கன்-4 என்ற புதிய ஹேட்ச்பேக் காரையும், மான்ஸா அடிப்படையிலான ஃபால்கன்-5 என்ற புதிய செடான் காரையும் டாடா அறிமுகம் செய்ய இருப்பது பல வாசகர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில், இந்த இரண்டு கார்களிலும் புத்தம் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினை டாடா பொருத்தியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் புதிய கார்களில் டர்போ சார்ஜர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் இருப்பதை சூசகமாக தெரிவித்தார்.

புதிய பெட்ரோல் எஞ்சின்
ஃபால்கன்-4 மற்றும் ஃபால்கன்-5 ஆகிய இரு கார் மாடல்களிலும் புதிய 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?

இதுதான் விசேஷம்
தற்போது மார்க்கெட்டில் குறைந்த விலையில் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களாக ஃபோக்ஸ்வேகன் போலோவும், ஃபியட் லீனியாவும் விற்பனை செய்யப்படுகின்றன. இவை முறையே ரூ.7.99 லட்சம் மற்றும் ரூ.7.37 லட்சம் விலையில் கிடைக்கின்றன. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கும் இந்த இரண்டு புதிய கார் மாடல்களும் இவற்றைவிட குறைவான விலையில் வரும் என்பதுதான் விசேஷமாக இருக்கிறது.

அறிமுகம்?
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபால்கன்-4 மற்றும் ஃபால்கன்-5 கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

பவர்
இரு கார்களிலும் பொருத்தப்பட புதிய டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மிகச்சிறப்பான பவர் டெலிவிரியையும், டார்க்கையும் அளிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த மாடல்கள் நிச்சயம் மார்க்கெட்டில் தனித்துவம் பெறும் என்று டாடா எதிர்பார்க்கிறது.

சிறப்புகள்
குறைந்த எஞ்சின் சுழல்வேகத்தில் சிறப்பான டார்க்கை இந்த எஞ்சின் வழங்குவதோடு, சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும் அளிக்கும். மேலும், டர்போ சார்ஜர் கொண்ட இந்த பெட்ரோல் எஞ்சின் குறைந்த கார்பனை வெளியிடும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








