திங்கட்கிழமை டாடாவின் புதிய டர்போசார்ஜர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!
வரும் திங்கட்கிழமை புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா இண்டிகா ஸீட்டா காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எஞ்சின் டர்போசார்ஜர் கொண்டது.

டர்போசார்ஜர் இருந்தாலும், 80 எச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும். சாதாரண டர்போசார்ஜர் இல்லாத எஞ்சின்களே இந்த அளவு பவரை அளிக்கின்றன.
ஆனால், டாடாவின் இந்த புதிய எஞ்சின் அதிக மைலேஜை தருவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மேம்படுத்தப்பட்டு புதிய பிராண்டு பெயரில் வரும் விஸ்டா காரில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








