புதிய 1.2 லி டர்போ பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்!
புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் ரெவோட்ரான் என்ற புதிய எஞ்சின் வரிசையில் முதலாவதாக வந்துள்ளது. இந்த புதிய டர்போ எஞ்சின் 85 பிஎஸ் பவரையும், 140 என்எம் அதிகபட்ச டார்க்கையும் வழங்கும்.

சப்தம் மற்றும் அதிர்வுகள் குறைவானதாக கூறப்படும் இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினை ஓட்டுனர் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதற்கான மல்டிபிள் டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஃபால்கன் காரில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








