டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவி கான்செப்ட்
மார்க்கெட்டில் படுவேகமான சரிவை சந்தித்து வரும் டாடா மோட்டார்ஸ், விஸ்வரூபம் எடுக்கும் முயற்சியாக புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அந்த நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ள புதிய மினி எஸ்யூவி கான்செப்ட் அனைவரையும் கவர்வதாக உள்ளது.

டிசைன்
இந்த புதிய மினி எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட், 17 இஞ்ச் அலாய் வீல்கள் உள்பட வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் நவீனத்துமாக கார் மாடலாக காட்சியளிக்கிறது. நெக்ஸன் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கான்செப்ட்டின் முன்புற டிசைன் நானோ பிக்ஸல் காரைப் போன்றே இருக்கிறது.

பிளாட்ஃபார்ம்
டாடா போல்ட், ஸெஸ்ட் கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் அதே எக்ஸ்1 பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மினி எஸ்யூவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த புதிய மினி எஸ்யூவியில் 110 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். புதிதாக உருவாக்கப்பட்டு வரும் டீசல் எஞ்சின் இந்த காரில் இடம்பெறும் என்று தெரிகிறது. 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்குடன் வரும்.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.6 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டாப் ஸ்பீடு
அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இது ஜம்ப் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








