புதிய 1.0லி பெட்ரோல் எஞ்சினுடன் வரும் புதிய டாடா நானோ கார்
நானோ காரின் விற்பனையை உயர்த்துவதற்காக பல புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.
சமீபத்தில் பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ ட்விஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட நானோ காரை அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.

புதிய வேரியண்ட்
பவர் ஸ்டீயரிங் கொண்ட மாடலுக்கு நானோ ட்விஸ்ட் என்று அறிமுகம் செய்யப்பட்டது போல, புதிய பெட்ரோல் எஞ்சினுடன் வரும் நானோ காருக்கு நானோ ப்ளஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது.

தீவிர சோதனை
புனே - கோல்ஹாப்பூர் சாலையில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட நானோ கார் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் 3 சிலிண்டர் கொண்டதாகும்.

பவர்ஃபுல் நானோ
மணிக்கு 100 கிமீ வேகத்தை அனாயசமாக செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் அம்சங்கள்
டிஸ்க் பிரேக், பக்கெட் இருக்கைகள், சக்திவாய்ந்த ஏர்கண்டிஷனர், புதிய டேஷ்போர்டு ஆகியவற்றுடன் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் நானோ ப்ளஸ் இருக்கும் என கூறப்படுகிறது.

எல்இடி ஹெட்லைட்
நானோ ப்ளஸ் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பனி விளக்குகள் இடம்பெற்றிருக்கும். மேலும், புதிய பானட் டிசைன் கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அறிமுகம் எப்போது?
டீசல் நானோ கார் திட்டத்தை ஒத்திப்போடுவதாக டாடா அறிவிட்ட நிலையில், இந்த புதிய பெட்ரோல் மாடல்தான் தற்போது நானோ காருக்கு புதுத்தெம்பு ஊட்ட வேண்டும். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய டாடா நானோ ப்ளஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுதவிர, நானோ காரின் ஆட்டோமேட்டிக் மாடலையும் அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: மாதிரிக்காக டாடா நானோ ட்விஸ்ட் காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








