கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் டாடா நானோ கார் அறிமுகம்!
இந்திய கார் மார்க்கெட்டில் தற்போது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய தொழில்நுட்பத்திலான டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பட்டியலில் தற்போது டாடா நானோ காரும் இணைந்து கொண்டுள்ளது. பவர் ஸ்டீயரிங்குடன் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா நானோ ட்விஸ்ட் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் புதிய கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

எஃப்- ட்ரோனிக்
எஃப் - ட்ரோனிக் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டாடா நானோ காரில் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கிறது.

சப்ளையர்
பெரும்பாலான ஃபார்முலா- 1 அணிகளின் தொழில்நுட்ப பார்ட்னராக செயல்பட்டு வரும் இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரெல்லி நிறுவனம்தான் டாடா நானோ காருக்கான புதிய ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனை சப்ளை செய்ய இருக்கிறது.

எரிபொருள் சிக்கனம்
புதிய ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட நானோ கார் 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டெமோ மாடல்
ஏஎம்டி என்று அழைக்கப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தையும், அமைப்பையும் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில், காரின் பாதியை வெட்டியெடுத்து பார்வைக்கு நிறுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

குறைந்த விலை மாடல்
ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷனுடன் டாடா நானோ கார் விற்பனைக்கு வரும்போது, மார்க்கெட்டிலேயே மிகக் குறைந்த விலை கொண்ட செமி ஆட்டோமேட்டிக் காராக இருக்கும்.


Click it and Unblock the Notifications








