குட் நியூஸ்... பவர் ஸ்டீயரிங்குடன் வரும் நானோ பேஸ் வேரியண்ட்!
அடுத்த மாதம் டாடா நானோ காரின் பேஸ் வேரியண்ட் பவர் ஸ்டீயரிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நானோ காரில் பவர் ஸ்டீயரிங் அறிமுகம் செய்யப்பட்டாலும், அது டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதனால், பேஸ் மாடலில் பவர் ஸ்டீயரிங் இல்லாதது பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பவர் ஸ்டீயரிங்குடன் பேஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா மோட்டார்ஸ். தற்போது விற்பனையில் இருந்து வரும் எல்எக்ஸ் மற்றும் சிஎக்ஸ் ஆகிய நானோ வேரியண்ட்டுகளுக்கு பதிலாக புதிய எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட்டை டாடா அறிமுகம் செய்ய இருக்கிறது.
தற்போது சிஎக்ஸ் வேரியண்ட்டில் இருக்கும் அனைத்து வசதிகளுடன் கூடுதலாக பவர் ஸ்டீயரிங் கொண்டதாக புதிய நானோ எக்ஸ்இ வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், மைலேஜ், எரிபொருள் மானி ஆகிய வசதிகளை கொண்ட புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்ற சிஎக்ஸ் வேரியண்ட் வசதிகள் புதிய எக்ஸ்இ வேரியண்ட்டில் தொடரும்.
ரூ.2.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டாடா நானோ எக்ஸ்இ அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








