சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் மற்றும் ஹைபிரிட் மாடல்களில் நானோ கார்: டாடா தீவிரம்
ஒரு பக்கம் இருப்பு அதிகரித்துக் கொண்டே வந்து எரிச்சலை கிளப்பினாலும், நானோ காரை தூக்கி நிறுத்த டாடா மோட்டார்ஸ் படாதபாடுபட்டு வருகிறது. புதிய வசதிகளையும், சிறப்பம்சங்களையும் சேர்த்து புதிய மாடல்களில் நானோ காரை வெளியிட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக, சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் மற்றும் ஹைபிரிட் மாடல்களில் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது.

சூப்பர்சார்ஜ்டு எஞ்சின்
இப்போது 2 சிலிண்டர்கள் கொண்ட 624சிசி டர்போசார்ஜ்டு எஞ்சின் நானோ காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 38 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டது. இந்த நிலையில், சூப்பர்சார்ஜ்டு எஞ்சினுடன் நானோ காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது டாடா. இதன்மூலம், இளைய சமுதாயத்தை கவர்ந்திழுக்க முடியும் என்று நம்புகிறது.

விரைவில் வருகிறது
சூப்பர்சார்ஜ்டு எஞ்சினுடன் வரும் நானோ காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. வரும் பண்டிகை காலத்தில் புதிய சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் கொண்ட நானோ வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைபிரிட் மாடல்
இ- ரேவ் என்ற பெயரில் நானோ காரின் ஹைபிரிட் மாடலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது இ-ரேவ் மாடல் சோதனை நிலைகளில்தான் உள்ளது. அறிமுகம் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இது சோதனைகளில் வெற்றி பெற்றால், வணிக ரீதியில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஏஎம்டி மாடல்
நானோ காரில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலையும் அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. இது நானோ ட்விஸ்ட் ஆக்டிவ் மாடலில் கொடுக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








