புதிய டாடா ஹேட்ச்பேக் காரின் பெயர் 'போல்ட்'!!
அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் இருக்கும் டாடாவின் புதிய ஹேட்ச்பேக் காருக்கு போல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபால்கன் 4 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த கார் அடுத்த மாதம் 3ந் தேதி டெல்லியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிசைன் மட்டுமின்றி புதிய பெட்ரோல் எஞ்சினுடன் அந்த கார் வருகிறது.

புதிய பிளாட்ஃபார்ம்
புதிய எக்ஸ்1 பிளாட்ஃபார்மின் டிசைன் தாத்பரியங்கள் நெறிமுறைகளின் படி, விற்பனையில் இருந்து வரும் விஸ்டா காரில் பல்வேறு மாற்றங்களை செய்து மேம்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

டிசைன்
புதிய பாடி பேனல்கள் கொண்டிருப்பதோடு, பானட் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். அழுத்தமான பாடி லைன்களுடன் கூடுதல் கம்பீரம் கொண்டதாக டிசைனில் மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும்.

இன்டிரியர்
புதிய போல்ட் காரின் உட்புறத்திலும் பல மாற்றங்களை செய்யப்பட்டிருக்கும். புதிய டேஷ்போர்டு, இருக்கைகள் என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாற்றங்களை கண்டிருக்ககிறது.

புதிய எஞ்சின்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை அம்சங்களுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது.

சஸ்பென்ஷன்
காரின் கையாளுமை மற்றும் சொகுசை வழங்கும் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். டாடா நானோவை தொடர்ந்து இந்த காரிலும் இசட்எஃப் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது மிக இலகுவாக இருப்பதுடன், விட்டம் குறைவான ஸ்டீயரிங் வீலுடன் வரும் என தெரிகிறது.

புதிய காம்பெக்ட் செடான்
இதனுடன் சேர்த்து 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பெக்ட் செடானையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காம்பெக்ட் செடான் கார் ஃபால்கன் 5 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








