டாடா சஃபாரி ஸ்ட்ராமுக்கு இ-பே.,யில் பிராண்டட் ஆக்சஸெரீஸ் விற்பனை!
ஆன்லைனில் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் இ-பே தளத்தில் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கான பிராண்டட் ஆக்சஸெரீஸ்களின் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
டாடா நானோ காருக்குத்தான் முதலில் இ-பே தளத்தில் விற்பனையை டாடா மோட்டார்ஸ் துவங்கியது. அது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து, தற்போது சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கான பல்வேறு பிராண்டட் ஆக்சஸெரீஸ்கள் விற்பனையை துவங்கியிருக்கிறது.

இதற்காக, இ-பே தளத்தில் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு பிரத்யேக பக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. பயணங்களின்போது பயன்படும் டீ-ஷர்ட்டுகள், ட்ரெக்கிங் பைகள், பன்முக பயன்பாடு கொண்ட கத்தி, டார்ச் லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிராண்டடு ஆக்சஸெரீஸ்களை இ-பே தளத்தில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.
இது பயண பிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. எக்ஸ்ப்ளோரர் என்ற பிராண்டில் இந்த புதிய ஆக்சஸெரீஸ்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
இ-பே தளத்தில் டாடா சஃபாரி ஸ்ட்ராம் ஆக்சஸெரீஸ்களை காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








