சென்னை, கோவையிலும் டிரக் ரேஸ்: டாடா அறிவிப்பு
முதல் முறையாக நடைபெற இருக்கும் டிரக் பந்தயத்தை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் 23ந் தேதி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் முதல் பந்தயம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை மற்றும் கோவையில் அடுத்தடுத்து இந்த டிரக் பந்தயம் நடக்கிறது.
இந்த பந்தயத்திற்காக 12 பிரைமா டிரக்குகளை டாடா மோட்டார்ஸ் மாற்றங்களை செய்து சோதனை செய்து வருகிறது. அனைத்து டிரக்குகளும் எஃப்ஐஏ அமைப்பின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த டிரக் பந்தயங்கள் எஃப்ஐஏ அமைப்பில் மேற்பார்வையில் நடைபெற உள்ளன.

மாற்றங்கள்
பிரேக் கூலிங் சிஸ்டம், விசேஷ எரிபொருள் டேங்க், ஸ்டீயரிங் வீல், புகைப்போக்கி அமைப்பு என அனைத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. பிரத்யேக இருக்கைகள், தீயணைப்பு வசதிகளும் இருக்கின்றன.

எஞ்சின்
இந்த டிரக்குகளில் 370 பிஎஸ் பவரை அளிக்கும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் செல்லும்.

ஸ்பான்சர்கள்
ஒவ்வொரு பந்தயமும், தகுதிச் சுற்று மற்று இறுதிச் சுற்று கொண்டதாக நடைபெறும். டாடா டி1 பிரமை டிரக் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வாப்கோ, கேஸ்ட்ரால், கம்மின்ஸ், அக்சென்ச்சர் மற்றும் ஜேகே டயர் நிறுவனங்கள் ஸ்பான்சர் வழங்குகின்றன.

முதல் தரிசனம்
அடுத்த மாதம் பிரகதி மைதானத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பாளர் கண்காட்சியில் இந்த புதிய டிரக்குகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








