ஆவலைத் தூண்டியுள்ள புதிய டாடா ஸெஸ்ட் காரின் உற்பத்தி துவங்கியது!
புனே, ரஞ்சன்கானில் உள்ள ஃபியட் ஆலையில் டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விரைவில் டீலர்ஷிப்புகளுக்கு டாடா ஸெஸ்ட் கார் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய டாடா கார் தற்போது விற்பனையில் இருக்கும் மான்ஸா செடான் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் புதிய மாடல் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சினும், டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வருகிறது. டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. தற்போது டாடா ஸெஸ்ட் காருக்கு ரூ.21,000 முன்பணத்துடன் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகிறது.
ஸெஸ்ட் காரைத் தொடர்ந்து புதிய போல்ட் காரின் உற்பத்தியும் விரைவில் துவங்கப்பட உள்ளது. டாடா விஸ்டா மற்றும் இண்டிகா கார்கள் உற்பத்தி செய்யப்படும் பிம்ப்ரியில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் புதிய போல்ட் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








