டாடா ஸெஸ்ட் காருக்கு 10,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு?!
டாடா ஸெஸ்ட் காருக்கு இதுவரை 10,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், கார் மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் மீண்டும் மிக முக்கிய இடத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 12ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், புதிய ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின், டீசல் மாடலில் ஏஎம்டி., கியர் பாக்ஸ் போன்றவையும் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக ஆர்வத்தை தூண்டியது.

ஸெஸ்ட் காருக்கு மிக தீவிரமான விளம்பர பிரச்சாரங்களை டாடா மோட்டார்ஸ் மிக தீவிரமாக செய்தது. இதற்கு கைமேல் பலனாக இதுவரை 10,000க்கும் அதிகமானோர் டாடா ஸெஸ்ட் காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக பிரபல ஆட்டோமொபைல் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டீசல் ஏஎம்டி மாடலுக்கு 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் ஏற்பட்டுள்ளது. ஸெஸ்ட் காருக்கான முன்பதிவு எண்ணிக்கையை குறித்து இதுவரை டாடா மோட்டார்ஸ் வாய் திறக்கவில்லை.
ஆனால், இதுவரை 25,000க்கும் அதிகமானோர் ஷோரூமில் வந்து இந்த புதிய கார் குறித்து விசாரணை செய்துள்ளதாக மட்டும் தெரிவித்தது. இதுவரை 2,000 டாடா ஸெஸ்ட் கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸெஸ்ட் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications







