மாருதி டிசையர் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துமா டாடா ஸெஸ்ட்? - ஓர் அலசல்

By Saravana

4 மீட்டருக்குள் நீளமுடைய அட்டகாசமான புதிய காம்பெக்ட் செடான் காரை டாடா மோட்டார்ஸ் நேற்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய கார் காம்பெக்ட் செடான் கார் மார்க்கெட்டில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகச்சிறப்பான டிசைன், வசதிகள் மட்டுமின்றி, டீசல் மாடலில் கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருவதுதான் இந்த கார் மீது அதிக ஆவலைத் தூண்டியுள்ளது.

 முதல் மாடல்

முதல் மாடல்

மாருதி செலிரியோ முதலாவது கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார் என்றாலும், அது பெட்ரோல் மாடல் கார். ஆனால், டாடா ஸெஸ்ட் காரில் டீசல் மாடலில் கிளட்ச் பெடல் இல்லாத இந்த புதிய மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

 கியர் அமைப்பு

கியர் அமைப்பு

Automated Manual Transmission (AMT) என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை டிரான்ஸ்மிஷனுடன் வரும் இந்த புதிய ஸெஸ்ட் காரில் 5 ஃபார்வர்டு கியர் மற்றும் ஒரு ரிவர்ஸ் கியர் அமைப்புடன் வருகிறது. கியரை மாற்ற கிளட்ச் பெடல் தேவையில்லை. வேகத்தை கூட்டுவதற்கும், குறைப்பதற்கும் கியரை மாற்ற வேண்டும்.

 ஆட்டோமேட்டிக் வசதி

ஆட்டோமேட்டிக் வசதி

ஒருவேளை கியர்களை மேனுவலாக மாற்ற விருப்பமில்லாதவர்களுக்கு வசதியாக, முழுவதும் ஆட்டோமேட்டிக் மோடில் வைத்து காரை செலுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 'D' என்ற மோடில் வைத்துவிட்டால், கியரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. சாதாரண ஆட்டோமேட்டிக் கார்கள் போன்று ஓட்ட முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

ஸெஸ்ட் காரில் 900 பிஎச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் மாடலில் புத்தம் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் மாடல் 80 பிஎச்பி ஆற்றலும், 140 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்

பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் நிரந்தரமாகவும், AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனலாகவும் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 டிசைன் டீம்

டிசைன் டீம்

இந்த காரை புனேயிலுள்ள டாடா டிசைன் பிரிவு எஞ்சினியர்கள், இங்கிலாந்தை சேர்ந்த கொவென்ட்ரி மற்றும் இத்தாலியின் டூரினை சேர்ந்த டிசைன் நிறுவனத்தின் எஞ்சினியர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

டிசையருக்கு ஆபத்து

டிசையருக்கு ஆபத்து

காம்பெக்ட் செடான் மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட டீசல் ஆட்டோமேட்டிக் காராக இந்த புதிய டாடா ஸெஸ்ட் வர இருக்கிறது. டிசைனும் கவர்ச்சியாக இருப்பதுடன், அதிக மைலேஜ், அதிக இடவசதி, ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பல்வேறு அம்சங்களும் மார்க்கெட் லீடராக இருந்து வரும் மாருதி டிசையருக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிற கார்களுக்கும்தான்...

பிற கார்களுக்கும்தான்...

மாருதி டிசையருக்கு மட்டுமின்றி ரூ.10 லட்சத்திற்குள் விற்பனை செய்யப்படும் டீசல் கார்களுக்கும் புதிய ஸெஸ்ட் போட்டியை கொடுக்கும் என்றும் ஆட்டோமொபைல் துறையினர் ஆருடம் கூறுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2014, 11:24 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+