2வது மாதமாக ஹோண்டா அமேஸை பின்னுக்குத் தள்ளிய டாடா ஸெஸ்ட்!

By Saravana

கடந்த மாதமும் விற்பனையில் ஹோண்டா அமேஸ் காரை பின்னுக்குத் தள்ளி காலரை தூக்கிவிட்டுள்ளது டாடா ஸெஸ்ட்.

விற்பனைக்கு வந்தது முதல் டாடா ஸெஸ்ட் காரின் விற்பனையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Tata Zest

மேலும், அக்டோபர் மாதத்தில் ஹோண்டா அமேஸ் காரை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்தது டாடா ஸெஸ்ட். ஆனால், இரு கார்களின் விற்பனை எண்ணிக்கைக்கு இடையில் 42 கார்கள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. ஆனால், நவம்பரில் இந்த வித்தியாசம் 525 கார்களாக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 3,835 டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை 3,310 கார்கள் என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த முறை அதிக எண்ணிக்கையிலான வித்தியாசத்தில் ஸெஸ்ட் முன்னேறியுள்ளது.

மேலும், கடந்த மாதம் விற்பனையின்படி, இரண்டாம் இடத்தில் உள்ள ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கும், டாடா ஸெஸ்ட் காருக்கும் இடையிலான வித்தியாசம் கூட சொற்ப எண்ணிக்கைதான்.

கடந்த மாதத்தில் 3,899 எக்ஸ்சென்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. டாடா ஸெஸ்ட் விற்பனையைவிட இது வெறும் 64 கார்கள் மட்டுமே கூடுதல். எனவே, அடுத்து வரும் மாதங்களில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரையும் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்திற்கு ஸெஸ்ட் முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 11, 2014, 12:10 [IST]
English summary
The Zest outsold Honda Amaze in October 2014, and it didn't stop there; the Zest has outsold Amaze for the second month in a row.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+