டாடா போல்ட், ஸெஸ்ட் கார்களுக்கான பிரத்யேக இணையதளங்கள் 'லைவ்' ஆனது
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் போல்ட் என்ற புதிய ஹேட்ச்பேக் காரையும், ஸெஸ்ட் என்ற புதிய காம்பெக்ட் செடான் காரையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. விஸ்டா மற்றும் மான்ஸா கார்களுக்கு மாற்றாக இந்த இரு புதிய கார்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
இந்த இரு கார்களுக்கும் இப்போது தனித்தனியான இணைய தளங்களை டாடா மோட்டார்ஸ் துவங்கியிருக்கிறது. இதன்மூலம், இந்த இரு புதிய கார் மாடல்களும் விரைவில் விற்பனைக்கு வந்துவிடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

விஸ்டா அடிப்படையில் போல்ட் காரும், மான்ஸா அடிப்படையில் ஸெஸ்ட் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய மாடல்களின் டிசைன் முற்றிலும் வேறுபட்டதாகவும், நவீனத்துவம் நிறைந்ததாகவும் இருக்கிறது.
இந்த இரு புதிய கார் மாடல்களிலும் டாடாவின் புத்தம் புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 85 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க்கையும் அளிக்கும். இதேபோன்று, டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 75 பிஎஸ் பவரையும், 190 என்எம் டார்க்கையும் அளிக்கும்.


Click it and Unblock the Notifications








