கேட்டீங்களா... டாடா ஸெஸ்ட் ஏஎம்டி மாடலுக்கு 6 மாதங்கள் காத்திருக்கணுமாம்!
டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரின் ஏஎம்டி மாடலுக்கு 6 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் நிலவுகிறதாம். இதனால், வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாத விற்பனையில் சிறிய வித்தியாசத்தில் ஹோண்டா அமேஸ் காரை ஓவர்டேக் செய்தது டாடா ஸெஸ்ட். இதுவரை 10,000 ஸெஸ்ட் கார்களை விற்பனை செய்துள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக, டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட ஏஎம்டி மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.

இதனால், அந்த மாடலுக்கான முன்பதிவும் அதிகரித்து வருகிறது. ஆனால், ஏஎம்டி கியர்பாக்ஸ் சப்ளை சீராக இல்லாததால், குறைவான எண்ணிக்கையிலேயே அந்த மாடல் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதையடுத்து, அந்த மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாடா ஸெஸ்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் மொத்தம் 9 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
ரூ.4,65 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் மாருதி டிசையர் கார்களுக்கு இது போட்டியாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








