டாடா ஸெஸ்ட் கார் விற்பனைக்கு நாள் குறித்த டாடா மோட்டார்ஸ்

By Saravana

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் வரும் 12ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வரும் தனது நிறுவனத்தை காக்க வரும் அஸ்திரமாகவே ஸெஸ்ட் காரை டாடா மோட்டார்ஸ் கருதுகிறது. மேலும், அதிக நம்பிக்கையுடன் இந்த தயாரிப்பை வெளியிடுகிறது.

Tata Zest

புதிய ரெவோட்ரான் 1.2 லிட்டர் டர்போசார்ஜர் எஞ்சின், டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்றவை டாடா ஸெஸ்ட் கார் மீது வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமிருக்கிறது.

டிசைனில் முற்றிலும் மாறுபட்டு வருவதுடன், 4 ஆண்டுகளுக்கு பின்னர் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வரும் புத்தம் புதிய மாடல் இது. தனது பிராண்டு மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு புதிய வர்த்தக முயற்சிகளையும் ஸெஸ்ட் கார் மூலமாக டாடா துவங்க உள்ளது.

இருப்பினும் அதிக போட்டி நிறைந்த காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் டாடா ஸெஸ்ட் காருக்கு அக்னி பரீட்சை காத்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 6, 2014, 8:51 [IST]
English summary
India's most trusted four wheeler manufacturer Tata Motors is all set to change its product portfolio. The Zest will be their first product that breaks the traditional Tata design. The Zest will be launched in India on the 12th of August, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+