இனி தெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை இலவசமாக பயன்படுத்தலாம்!

By Saravana

நல்லெண்ண அடிப்படையில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருந்த எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பங்களுக்காக பெற்றிருந்த அனைத்து காப்புரிமைகளையும் விலக்கிக் கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த தெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம், உலகில் எந்தவொரு கார் தயாரிப்பாளரும் இனி தெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு தொழில்நுட்பத்தை இலவசமாக பயன்படுத்த முடியும்.

இந்த தகவலை தெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார். அனைத்து காப்புரிமைகளும் இனி உங்களுடையது என்று அவர் பெருந்தன்மையோடு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Tesla S Car

இந்த அறிவிப்பை தொடர்ந்து தெஸ்லா எலக்ட்ரிக் காரின் பேட்டரி மற்றும் இதர தொழில்நுட்பங்களை எந்தவொரு நிறுவனம் அல்லது தனியாரும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை பயன்டுத்துவோர் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பேோது தெஸ்லா எஸ் என்ற சொகுசு எலக்ட்ரிக் கார் மாடலை தெஸ்லா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மிக பாதுகாப்பான கார் என்று பெயரெடுத்திருப்பதோடு, இந்த ரகத்தில் இதுவரை எந்தவொரு கார் மாடலும் தயாரிக்கப்படவில்லை. எனவே, போட்டியில்லா ராஜாவாக தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார் வலம் வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 14, 2014, 16:52 [IST]
English summary
In an unprecedented move, Tesla, the popular electric car manufacturer, has freed all the patents the company owns. The announcement was made by Elon Musk, company founder, in a blog post, titled "All out patents belong to you".
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+