தெஸ்லாவுக்கு அடித்த ஜாக்பாட்... 100 தெஸ்லா எஸ் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த சீனர்!
100 தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார்களுக்கு சீனர் ஒருவர் ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால், தனது பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிடவில்லை.
இந்த கார்களை வாங்கி கன்வெர்ட்டிபிள் மாடலாக மாற்றி பல்வேறு நாடுகளில் அவர் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கன்வெர்ட்டிபிள் மாடல்
கன்வெர்ட்டிபிள் மாடலில் தற்போது தெஸ்லா எஸ் கார் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால், கூரையுடைய கார்களை கன்வெர்ட்டிபிள் மாடலாக மாற்றுவதில் நிபுணத்துவம் வாய்ந்த நியூபோர்ட் எஞ்சினியரிங் நிறுவனம் மூலம் தெஸ்லா எஸ் கார்களை கன்வெர்ட்டிபிள் மாடலாக மாற்றம் செய்ய அந்த சீனர் முடிவு செய்துள்ளார்.

விற்பனை
பார்சிலோனா, கலிஃபோர்னியா மற்றும் துபாய் ஆகிய இடங்களில் தெஸ்லா எஸ் கன்வெர்ட்டிபிள் கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று அந்த சீனர் நம்புகிறார். எனவே, கன்வெர்ட்டிபிள் தெஸ்லா எஸ் கார்களை அங்கு விற்பனை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

பெரும் முதலீடு
கன்வெர்ட்டிபிள் மாடலாக மாற்றி விற்பனை செய்வதற்கு ஒரு காருக்கு 30,000 டாலர் முதல் 50,000 டாலர் வரை முதலீடு செய்ய அந்த சீனர் திட்டமிட்டுள்ளாராம்.

தெஸ்லா ஒத்துக்கொண்டதா?
தெஸ்லா எஸ் கார்களை கன்வெர்ட்டிபிள் மாடலாக மாற்றுவதற்கு தெஸ்லா நிறுவனம் ஒத்துக் கொண்டதா என்பது தெரியவில்லை. மேலும், சொந்தமாகவே தெஸ்லா எஸ் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலை தயாரிப்பது குறித்து அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெர்ஃபார்மென்ஸ் எலக்ட்ரிக் கார்
உலகின் மிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் காராக தெஸ்லா எஸ் மாடல் குறிப்பிடப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான பெர்ஃபார்மென்ஸ் கெண்ட இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வரை டாப் ஸ்பீடு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








