ராணுவ உடுப்பு அணிந்த தெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்!
அமெரிக்காவில் ராணுவத்தில் சிறப்பாக சேவைபுரிந்த மூத்த அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அமெரிக்காவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் நிறுவனமான தெஸ்லா நிறுவனம் சிறப்பு பதிப்பு தெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை வெளியிட்டுள்ளது.

கஸ்டமைஸ் நிறுவனம்
அமெரிக்காவின் புழ்பெற்ற எஸ்எஸ் கஸ்டம்ஸ் என்ற கார் கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ராணுவ வாகனம் போன்று தெஸ்லா எஸ் காரை தெஸ்லா நிறுவனம் மாற்றியுள்ளது.

ராணுவ வாகனம்
ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்களிலான ஸ்டிக்கர் மூலம் இந்த கார் மாற்றப்ப்டடுள்ளது.

கூடுதல் ஆக்சஸெரீகள்
பச்சை நிற அலாய் வீல்கள், மஞ்சள் நிற ஹெட்லைட்டுகள், ராணுவ பயன்பாட்டு பொருட்களை எடுத்து செல்லும் வகையில் கேரியர் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு பணி
மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு பணி வழங்குவதில் தெஸ்லா முன்னிலை வகிக்கிறது. அந்த நிறுவனத்தின் 5 சதவீத பணியாளர்கள் ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரிகளாவர். இதுதவிர, புதிதாக 600 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை விரைவில் பணியில் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தெஸ்லா மாடல் எஸ்
உலகின் மிகச் சிறப்பான செயல்திறன் மிக்க எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் செடான் மாடல். 5 இருக்கை வசதி கொண்ட இந்த காரின் மின்மோட்டார் அதிகபட்சமாக 416 பிஎச்பி பவரையும், 600என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்டது. உலகின் சிறந்த பாதுகாப்பான கார்களில் ஒன்றாக பெருமை பெற்ற இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications








