இப்போது விற்பனையில் இருக்கும் உலகின் அழகான டாப்- 10 சொகுசு கார்கள்!
ஒவ்வொருவருக்கும் ரசனையில் வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்தையும் கடந்து சில கார் மாடல்கள் அனைத்து தரப்பினரையும் வசீகரித்துவிடும்.
பல சிறப்பான கார் மாடல்கள் இருந்தாலும், டிசைனில் பார்த்தவுடன் கவர்ந்துவிடும் உலகின் அழகான கார் மாடல்களை இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

அழகான கார்கள்
உலகின் அழகான கார் மாடல்களின் தொகுப்பை அடுத்த ஸ்லைடிலிருந்து காணலாம்.

10. ஆடி ஆர்8
ஆடி நிறுவனத்தின் டிசைனுக்கு முத்தாய்ப்பாக கருதப்படும் மாடல் ஆடி ஆர்8. மார்க்கெட்டுக்கு வந்து பத்தாண்டுகளானாலும் இளமை முறுக்குடன் பார்ப்போரை முதல் பார்வையிலேயே சுண்டி இழுக்கும் அழகை கொண்டுள்ளது.

9. லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர்
உலக அளவில் கார் பிரியர்களின் இதயத்தில் நீங்கா இடத்துடன் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ரேஞ்ச்ரோவர் ஆடம்பர எஸ்யூவியின் கம்பீரத்திற்கு ஈடு இணையில்லை என்று கூறலாம். உலகின் பல கார் தயாரிப்பு நிறுவனங்களின் எஸ்யூவி டிசைன் தாத்பரியத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது.

8. போர்ஷே 911
போர்ஷே நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தியதில் பெரும் பங்கு வகிக்கும் மாடல். இந்த காரின் பிரத்யேக டிசைன் அனைவரையும் கவர்ந்த ஒன்று. விளையாட்டுத் துறையில் இருக்கும் சர்வதேச பிரபலங்கள் அனைவரிடத்திலும் இந்த கார் இருக்கும் என்பதே இதன் டிசைனுக்கும் செயல்திறனுக்கும் சான்றாக கூறலாம்.

7. கேடில்லாக் இஎல்ஆர்
கேடில்லாக் இஎல்ஆர் ஹைபிரிட் காரின் டிசைனும், சிறப்பம்சங்களுடன் கோடீஸ்வரர்களை சொக்க வைத்த ஒன்று. பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட இந்த காரின் டிசைன் உலக அளவில் வெகுவாக புகழப்படுகிறது.

6. லம்போர்கினி ஹூராகென்
இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய லம்போர்கினி ஹூராகென் காரின் டிசைனும் வெகுவாக பாராட்டுதலை பெற்றது. விற்பனைக்கு வந்தது முதல் இதுவரை 1000க்கும் அதிகமான முன்பதிவை பெற்றிருப்பதிலிருந்து இந்த காரின் டிசைனுக்கு கிடைத்த வெற்றியாக கருதலாம்.

5. அஸ்டன் மார்ட்டின் வி8 வேன்டேஜ்
அஸ்டன் மார்ட்டின் வி8 வேன்டேஜ் காரின் முகப்பு கிரில், பானட் டிசைன் வெகுவாக கவர்கிறது. இதன் வீல் ஆர்ச்சுகளும், பக்கவாட்டு டிசைனும் கம்பீரத்தை கொடுக்கின்றன.

4. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் - கூபே
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் கூபே மாடல் உலகின் அழகான கார் மாடல்களில் ஒன்று. உலகின் பல்வேறு நாடுகளில் பணக்காரர்களின் முதல் சாய்ஸ் என்று கூறுமளவிற்கு இதன் டிசைன் சிலாகிக்கப்படுகிறது.

3.ஃபெராரி 458 இட்டாலியா
இத்தாலியை சேர்ந்த பிரபல டிசைன் நிறுவனமான பினின்ஃபரீனா நிறுவனம்தான் இந்த ஃபெராரி காரை வடிவமைத்தது. இதன் அழகை புகழாத மீடியாக்கள் இல்லையெனும் அளவுக்கு டிசைனுக்கு பெயர் பெற்றது.

2. ஆல்ஃபா ரோமியோ 4சி ஸ்பைடர்
பெயருக்கு ஏற்றாற்போல் கொள்ளை அழகுடன் காட்சி தந்து மனதை உருகச் செய்துவிடும். பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருப்பதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கலாம் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.

1. ஜாகுவார் எஃப்டைப் கூபே
நேற்றைய தூக்கத்தை கெடுத்த ஜாகுவார் அழகி என்ற தலைப்பில் இந்த காரை பற்றி எழுதியிருக்கிறோம். அது உண்மை என்பதை இதன் ஒவ்வொரு அங்கமும் உண்மையாக்குகிறது. பெரும் பணக்காரர்களின் கனவுக் கன்னியாக திகழும் ஜாகுவார் எஃப்- டைப் கூபே காரையே தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களில் மிக அழகானதாக ஆட்டோமொபைல் சமூகம் வர்ணிக்கிறது. மீண்டும் ஒரு தொகுப்பில் சந்திப்போம்.

உங்களுக்கு பிடித்தமான கார்கள்
உங்களுக்கு பிடித்தமான கார் மாடல் எது என்பதை கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








