சுற்றுச்சூழலுக்கு நண்பேண்டா... வருகிறது புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி!

அடுத்த தலைமுறை மாடலாக வரும் புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி ஹைபிரிட் மாடலிலும் விற்பனைக்கு வருகிறது. இது மிகக் குறைவான கார்பனை வெளியிடும் எஸ்யூவி மாடலாக இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

குறைவான கார்பனை வெளியிடும் தன்மை கொண்டதாக இருந்தாலும், இந்த புதிய மாடல் மிகச்சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்தும் என்றும் வால்வோ பெருமிதம் தெரிவித்துள்ளது.


 ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியில் வரும் ஹைபிரிட் மாடல் டி8 என்ற டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் சக்திவாய்ந்த மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

எஞ்சின் மற்றும் மின் மோட்டார்

எஞ்சின் மற்றும் மின் மோட்டார்

இந்த எஸ்யூவியில் 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, 80 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மின் மோட்டாரும் இணைந்து செயலாற்றும். இவை இரண்டும் சேர்ந்து ஹைபிரிட் மோடில் 400 எச்பி பவரை வாரி வழங்கும்.

செயல்திறன்

செயல்திறன்

மின்மோட்டார் பின்புற வீல்களுக்கும், பெட்ரோல் எஞ்சின் முன்புற வீல்களுக்கும் பவரை செலுத்தும். மேலும், மின்மோட்டார் மிகச்சிறந்த டார்க்கை வழங்கும் என்பதால் உடனடி பிக்கப் கிடைக்கும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 45 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

எமிசன் அளவு

எமிசன் அளவு

இந்த பிரம்மாண்ட எஸ்யூவி ஒரு கிலோமீட்டருக்கு 60 கிராம் கார்பன் டை ஆக்சைடை மட்டும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பதால் வால்வோவின் மிக குறைவான எமிசன் தரம் கொண்ட எஸ்யூவி மாடலாக வருகிறது.

இதர எஞ்சின்கள்

இதர எஞ்சின்கள்

டி8 ஹைபிரிட் மாடலைத் தவிர்த்து பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களிலும் வருகிறது. டி6 பெட்ரோல் மாடலின் சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சம் 320 எச்பி பவரையும், டி5 மாடலின் டர்போசார்ஜ்டு எஞ்சின் 254 எச்பி பவரையும் அளிக்கும். இருவிதமான டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். டி4 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் 190 எச்பி பவரை அளிக்கும். ட்வின் டர்போசார்ஜர் கொண்ட டி5 மாடலின் டீசல் எஞ்சின் 225 எச்பி பவரை அளிக்கும். இவை மிகச்சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

வரும் ஆகஸ்ட் மாதம் சர்வதேச சந்தையில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 11, 2014, 16:59 [IST]
English summary
SUVs are considered to be most polluting in the passenger car segment. Going green with these vehicles is not really a practical idea. Volvo though, has managed a solution. The Swedish manufacturer has brought an all new engine line up to power their all-new XC90 SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+