2015ம் ஆண்டின் சிறந்த கார் ஹூண்டாய் எலைட் ஐ20!
2015ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த காருக்கான விருதை ஹூண்டாய் எலைட் ஐ20 பெற்றிருக்கிறது. இதேபோன்று, சிறந்த மோட்டார்சைக்கிளாக ஹார்லி டேவிட்சன் 750 அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் சிறந்த கார் (ICOTY)மற்றும் மோட்டார்சைக்கிளுக்கான IMOTY) விருதுகளை பிரபல ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவும், ஜேகே டயர் நிறுவனமும் சேர்ந்து தெரிவு செய்து வழங்கி வருகின்றன.

எரிபொருள் சிக்கனம், தோற்றம், சொகுசு, பாதுகாப்பு, பெர்ஃபார்மென்ஸ், புதிய தொழில்நுட்பங்கள், விலை, பணத்திற்கான மதிப்பு, இந்திய சாலைகளுக்கு ஏற்ற அம்சங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருதுக்கான மாடல்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
2015ம் ஆண்டுக்கான சிறந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் 10 க்கும் மேற்பட்ட கார் மாடல்களும், 5க்கும் அதிகமான பைக் மாடல்கள் இருந்தன.

இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கான சிறந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிளுக்கான விருதுகள் மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த காராக ஹூண்டாய் எலைட் ஐ20யும், சிறந்த மோட்டார்சைக்கிளாக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2014ம் ஆண்டுக்கான சிறந்த காருக்கான விருதை ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் பெற்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு சிறந்த காருக்கான விருதை பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








