புதிய டாடா ஸெஸ்ட் கார் இன்று விற்பனைக்கு வருகிறது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் இன்று விற்பனைக்கு வருகிறது.
பெட்ரோல் மாடலில் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ எஞ்சினுடனும், டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு வருகிறது.

மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமின்றி, டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வருவதும் எதிர்பார்ப்புக்கு காரணம்.
இதன் செக்மென்ட்டில் சிறந்த வசதிகள் கொண்ட மாடலாகவும் ஸெஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய செடான் கார் மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட், ஹோண்டா அமேஸ் கார்களுடன் போட்டி போடும்.
இந்த காரின் விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அடுத்த சில மணி நேரத்தில் வழங்குகிறோம்.


Click it and Unblock the Notifications








