2 புதிய போர்ட்டபிள் நேவிகேஷன் சிஸ்டம்களை அறிமுகப்படுத்திய டாம் டாம்!

By Saravana

வழிகாட்டு சாதனங்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் டாம் டாம் நிறுவனம் தற்போது 2 புதிய அடக்கமான வழிகாட்டு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டார்ட் 20 மற்றும் ஸ்டார்ட் 25 ஆகிய பெயர்களில் இந்த புதிய வழிகாட்டு சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்கும். முதல் மாடல் 4.3 இஞ்ச் திரையையும், இரண்டாவது மாடல் 5 இஞ்ச் திரையையும் கொண்டது. ஸ்டார்ட் வரிசையில் டாம் டாம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த புதிய வழிகாட்டு சாதனங்கள் மூலம் நாட்டிலுள்ள 7,300 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களின் தகவல்களை பெற முடியும்.


 வரைபட தகவல்

வரைபட தகவல்

இந்த இரு சாதனங்களிலும் இருக்கும் வரைபட தகவல்கள் ஆண்டுக்கு 4 முறை இலவசமாக அப்டேட் செய்யப்படும் என்று டாம் டாம் தெரிவித்துள்ளது. மேலும், குறைவான விலையில் ஆயுட்கால வரைபட தகவல் சேவையயும் வழங்குவதாக டாம் டாம் கூறியுள்ளது. டேஷ்போர்டு அல்லது வின்ட்ஸ்கிரீனில் இவற்றை பொருத்திக் கொள்ளலாம்.

வசதிகள்

வசதிகள்

வாய்மொழி வழிகாட்டும் வசதி, ஆங்கிலம், இந்தி தவிர்த்து 14 இந்திய மொழிகளில் வாய்மொழி சேவை, பொருத்திக் கொள்வதற்கான டியூவல் மவுண்ட், லேண்ட்மார்க் நேவிகேஷன் போன்ற வசதிகளை பெற முடியும். மேலும், இந்த சாதனத்தில் உள்ள ஐக்யூ ரூட் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கான வழியை காட்டும் வசதி இருக்கிறது. இதன்மூலம், நேரம், எரிபொருள் மிச்சப்படும்.

வரைபட பகிர்வு வசதி

வரைபட பகிர்வு வசதி

புதிய வழிகள் குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்வதுடன் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான மேப் ஷேர் கம்யூனிட்டி வசதியும் உள்ளது. மேலும், அவசரகாலத்தில் உதவும் வகையில், அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் அவசர உதவி சேவைகள் குறித்த தகவல்களையும் பெற முடியும்.

 விலை

விலை

ஸ்டார்ட் 20 வழிகாட்டு சாதனம் ரூ.9,499 விலையிலும், ஸ்டார்ட் 25 வழிகாட்டு சாதனம் ரூ.10,999 விலையிலும் கிடைக்கும். இந்த புதிய டாம் டாம் நேவிகேஷன் சாதனங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தும், நாடு முழுவதும் உள்ள கார் ஆக்சஸெரீஸ் கடைகளிலும் கிடைக்கும் என டாம் டாம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2014, 13:16 [IST]
English summary
TomTom, the leading automotive navigation equipment manufacturer, has launched its Start Series smart Portable Navigation Device (PND) series in India - Start 20 and Start 25. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+